
சைரன் தெலுங்கு ரிலீஸில் சிக்கல்?
கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் என்று நிறுவனம்தான் இப்படத்தின் தெலுங்கு வினியோகஸ்தர்கள். இவர்கள்தான் சிவகார்த்திகேயன் நடித்து தமிழில் வெளிவந்த "அயலான்" படத்தையும் தெலுங்கில் வாங்கி வெளியிடுவதாக அறிவித்தார்கள். ஆனால், அப்படமும் இதுவரை வெளியாகவில்லை.
"சைரன்" படத்தில் தெலுங்கு ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற கீர்த்தி சுரேஷ், அனுபமா நடித்திருப்பதால் அங்கும் படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள்.
"அயலான்" படம் ஓடிடியில் வெளிவந்துவிட்டது. ஆனால், தெலுங்குப் பதிப்பு இன்னும் வெளியாகவில்லை. "சைரன்" படத்தின் நிலை என்ன என்பது இனிமேல்தான் தெரிய வரும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!