புஷ்பா 2 டப்பிங் ஜரூர் : ஆனால் ராஷ்மிகா முகத்தில் சோகம் | குபேரா படத்தின் முன்னோட்ட வீடியோவை வெளியிடும் மகேஷ் பாபு | யஷ் நடிக்கும் 'டாக்சிக்' படக்குழு மீது வழக்குப்பதிவு | ‛அமரன்' ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை | கங்குவா டிரைலர் - அஜித் கொடுத்த ரியாக்ஷன் | 'கங்குவா' வெளியீடு - வழக்கு சிக்கல்களுக்குத் தீர்வு | 'பிளடி பெக்கர்' நஷ்டத்தைத் திருப்பித் தரும் தயாரிப்பாளர் நெல்சன்? | மே 1 - தொழிலாளர் தினத்தில் ரஜினிகாந்தின் 'கூலி' ரிலீஸ்? | தள்ளிப்போகும் ‛வீர தீர சூரன்' பட ரிலீஸ் | பொங்கல் ரேசில் இணையும் பாலாவின் வணங்கான் |
ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, யோகி பாபு ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சைரன். அந்தோணி பாக்யராஜ் இயக்கி உள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் பிப்ரவரி 16ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இன்று இப்படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியாகி உள்ளது. அதில், சைரன் படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாகவும், இப்படம் 155 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 35 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் நிறைந்த திரில்லர் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார்.