என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

மறைந்த ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் ஜீவா ஒளிப்பதிவாளராக இந்தியன், ஜென்டில்மேன், வாலி போன்ற முக்கிய படங்களில் பணியாற்றியவர். 12பி, உன்னாலே உன்னாலே, தாம் தூம் போன்ற படங்களை இயக்கியும் உள்ளார். பின்னர் அவர் உடல்நலக் குறைவால் காலமானார்.
தற்போது ஜீவாவின் மகள் சனா மரியம் இயக்குனர் ஆக அறிமுகமாக உள்ளார். இவர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தில் சிறு வயது விக்ரம் கதாபாத்திரத்தில் நடித்த சந்தோஷ் மற்றும் சிறு வயது ஐஸ்வர்யா ராயாக நடித்த சாரா அர்ஜுன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை சுந்தர்.சி, குஷ்பு தயாரிப்பு நிறுவனமான அவனி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.