பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

குணா ஹேண்ட்மேட் பிலிம்ஸ் சார்பில் நீலிமா குணா, யுக்தா குணா ஆகியோர் தயாரித்துள்ள படம் 'யூபோரியா'. குணசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் பூமிகா சாவ்லா, கவுதம் வாசுதேவ் மேனன், சாரா அர்ஜுன், நாசர், ரோஹித்,விக்னேஷ் கவி ரெட்டி, லிகிதா யலமஞ்சலி, அடாலா பிருத்வி ராஜ்,கல்ப லதா, சாய் ஸ்ரீனிகா ரெட்டி, அஷ்ரிதா வேமுகந்தி, மேத்யூ வர்கீஸ், ஆதர்ஷ் பாலகிருஷ்ணா, ரவி பிரகாஷ், நவீனா ரெட்டி, லிகித் நாயுடு மற்றும் பலர்.உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு கால பைரவா இசையமைத்துள்ளார். பிரவீன் கே. போத்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தெலுங்கில் தயாராகி உள்ள இந்தப் படத்தை தமிழில் தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது. பிப்ரவரி 6ம் தேதி முதல், தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
படம் குறித்து இயக்குனர் குணசேகர் கூறும்போது "சமூகத்தில் இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் உண்மைச் சவால்களை உணர்வுப்பூர்வமாக பிரதிபலிக்கும் கதையுடன், இளைஞர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களை ஒருசேர கவரும் வகையில் தனித்துவமான கருத்தில் உருவாகியுள்ளது. இன்றைய இளைஞர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு இடையேயான உறவுகள், புரிதல்கள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை நெஞ்சைத் தொடும் விதத்தில் ஆராய்ந்து பேசும் திரைப்படமாகவும் 'யூபோரியா' அமைந்துள்ளது" என்றார்.