''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நட்சத்திர நிகழ்ச்சி ‛குக் வித் கோமாளி'. சமையல் நிகழ்ச்சியை சுவையுடன் காமெடியாகவும் கொடுக்க முடியுமா என பார்வையாளர்களை வியக்க வைத்தது. இந்த நிகழ்ச்சி மூலம் பலர் புகழ் வெளிச்சம் பெற்றனர். அதில் முக்கியமானவர் நடிகர் புகழ்.
நான்கு சீசன்களை கடந்த இந்நிகழ்ச்சியின் 5வது சீசன் விரைவில் துவங்க உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக பிரபல சமையல் கலை நிபுணர்கள் ‛செப்' தாமோதரன் மற்றும் ‛செப்' வெங்கடேஷ் பட் ஆகியோர் இருந்து வருகின்றனர். 5வது சீசனுக்கும் இவர்கள் தான் நடுவர்கள் என செய்திகள் வெளியாகி வந்தன. தற்போது இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டதாக வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ‛‛குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவில்லை என தெரிவித்துக் கொள்கிறேன். பல லட்சம் பார்த்த இந்த நிகழ்ச்சியிலிருந்து சிறிது காலம் பிரேக் எடுக்க விரும்புகிறேன். எனது ஜாலியான இன்னொரு முகத்தை காண்பித்த இந்த நிகழ்ச்சிக்கும், 24 ஆண்டுகளுக்கு மேலாக நான் அங்கம் வகித்த சேனலுக்கும் நன்றி. அதே நேரத்தில் மற்ற வாய்ப்புகளை நோக்கி செல்ல முடிவெடுத்து உள்ளேன்.
பலரின் மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு நிகழ்ச்சியில் நான் பங்கேற்க முடியாது என்ற கடினமான முடிவை எடுத்துள்ளேன். இதில் நான் உறுதியாக உள்ளேன். விரைவில் வர உள்ள வித்தியாசமான வேறு ஒரு நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் சந்திக்க காத்திருக்கிறேன். அது என்ன என்பதை யூகித்து கொண்டே இருங்கள் நன்றி'' என தெரிவித்துள்ளார்.
வெங்கடேஷ் பட்-ன் இந்த முடிவு ‛குக் வித் கோமாளி' நிகழ்ச்சி குழுவினருக்கும், அதன் ரசிகர்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.