நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த வருடம் வெளியாகி 600 கோடி வசூலைக் குவித்த படம் ஜெயிலர். இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்புள்ளது என்று ஏற்கெனவே ஒரு தகவல் இருந்தது. அந்தத் தகவல் உண்மைதான் என தற்போது தெரிய வந்துள்ளது. அப்படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்த மிர்னா இது பற்றிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அவர் ஜெயிலர் படத்தின் இயக்குனர் நெல்சனுடன் பேசியதாகவும், அப்போது நெல்சன் ஜெயிலர் 2 படத்திற்கான கதையை எழுதி வருவதாக சொன்னதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இரண்டாம் பாகத்தில் தன்னுடைய கதாபாத்திரம் இருக்கிறதா இல்லையா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அது இயக்குனரின் முடிவு சார்ந்த ஒரு விஷயம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அப்படம் முடிந்தபின் ரஜினியின் 172வது படமாக ஜெயிலர் 2 படம் உருவாகலாம்.