Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

100 பேர் முன்னால் நடிப்பது எளிதல்ல : கவுதம் மேனன்

23 பிப், 2024 - 13:50 IST
எழுத்தின் அளவு:
Acting-in-front-of-100-people-is-not-easy:-Gautham-Menon

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில், பிக்பாஸ் புகழ் வருண் கதாநாயகனாக நடித்துள்ள 'ஜோஷ்வா - இமை போல காக்க' திரைப்படம் மார்ச் 1 அன்று வெளியாகிறது. இதில் ராக்கே கதாநாயகியாக நடித்துள்ளார். கிருஷ்ணா, யோகிபாபு, டிடி, மன்சூர் அலிகான், விசித்ரா உள்பட பலர் நடித்துள்ளனர்.

படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் கவுதம் மேனன் பேசியதாவது: நான் என்ன நினைத்தேனோ அதை அப்படியே செய்வதற்கு சுதந்திரம் கொடுத்த தயாரிப்பாளர் ஐசரிக்கு நன்றி. வருண் குழந்தை மாதிரி. நானும் சினிமாவில் நடிப்பதால் சொல்கிறேன், கேமரா முன்னால் நின்று, 100 பேர் முன்னால் நடிப்பது எளிதான விஷயம் கிடையாது. அதை எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் நடித்துக் கொடுத்தார் வருண். படத்தில் பாதி இடத்தில் செருப்பு, ஷூ இல்லாமல் நடித்தார். கிருஷ்ணாவும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசியதாவது : 'சிங்கப்பூர் சலூன்' வெற்றியைத் தொடர்ந்து , மார்ச் 1 அன்று 'ஜோஷ்வா இமை போல காக்க' படம் வெளியாகிறது. இதுவும் எங்களுக்கு லாபம் தரும் என்று நம்புகிறேன். இந்தப் படம் ஒரு பரிசோதனை முயற்சி என்று கவுதம் சொன்னார். நான் உடனே சம்மதம் சொன்னேன்.

என்னுடைய சகோதரி மகன் தான் வருண். நான் தயாரிக்கும் படங்களில் எல்லாம் கேமியோ ரோலில் நடித்துக் கொண்டிருந்தார். எனக்கு கவுதமின் லவ் படங்கள் பிடிக்கும். அவரிடம் வருணை அறிமுகப்படுத்தினேன். வருண் சாக்லேட் பாய் போல உள்ளான் எனக் கூறி அவரை வைத்து சூப்பர் லவ் ஸ்டோரி செய்யலாம் என்று கவுதம் உற்சாகமாக சொன்னார். பிறகு இது ஆக்ஷன் படமாக மாறியது. படத்தில் 10 சண்டைக் காட்சிகள் உள்ளது. படம் முழுக்க ஆக்ஷன் தான். ஹாலிவுட் படம் போல ஆக்ஷன் காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். அதற்கு கதிரின் ஒளிப்பதிவும், கார்த்திக்கின் இசையும் பெரும் பலம். மற்ற தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பாக உழைத்துள்ளனர். என்றார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'பர்த்மார்க்' படத்திற்காக கர்ப்பிணி பெண்கள் பற்றி ஒரு வருடம் ஆய்வு : இயக்குனர் தகவல்'பர்த்மார்க்' படத்திற்காக ... ஓடிடி படத்தில் ஹீரோவாக நடிக்கும் யோகி பாபு ஓடிடி படத்தில் ஹீரோவாக நடிக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KayD -  ( Posted via: Dinamalar Android App )
23 பிப், 2024 - 18:38 Report Abuse
KayD கார்த்தி music songs ok. Trailer ஒரு few years back பார்கும் போது இந்த படம் eppo relase ஆகும் nu oru ஆர்வம் இருந்திச்சு. தோசை sooda irundgaa தான் taste ஆற ஆற saapida கஷ்டம்.. இனியாவது ivalvu lessons கற்ற பிறகு gvm ungaluku evalvu prichina இருந்ததாலும் உங்கள் fans காக சொன்ன date la relase பண்ணுங்க.. Minnale nu மின்ன வச்சு ரசிகர்கள வேட்டையாடி விளையாட vacheenga.. உங்களுக்கு தெரியும் அச்சம் என்பது மடமையடா nu விண்ணை தாண்டி வந்த ஆள் நீங்க ippo கூட தூரத்துல theriym துருவ நட்சத்திரம் ஒளி காக இந்த joshua இமை போல காத்து கொண்டு இருக்கிறேன்.. எப்போ இந்த thotta எனை நோக்கி பாயும் என்று.. அட்வான்ஸ் வாழ்த்துக்கள் வாசு..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Na Na
  • நா நா
  • நடிகர் : சசிகுமார் ,
  • இயக்குனர் :NV நிர்மல்குமார்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar-advertisement-tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in