வெற்றிக் கோட்டைத் தொடுவாரா 'பி.டி. சார்' | சூரி பட விழாவிற்கு வரும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் | இயக்குனரே பொறுப்பேற்பு | தமிழ் ரசிகர்களைக் கவரும் மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் | கல்வி விழா : விஜய்யின் இரண்டு புதிய திட்டம் | புஷ்பா 2 பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட மீனா | தேர்தலில் வெற்றி பெற்றால் சினிமாவுக்கு முழுக்கு : கங்கனா அறிவிப்பு | 'சலார் 2' - டிராப் ஆகிறதா, தள்ளிப் போகிறதா ? | 'அஅஅ' - 'குட் பேட் அக்லி' முதல் பார்வை : என்ன வித்தியாசம் ? | ஒரே படத்தில் கமிட்டான மூன்று சீரியல் நடிகைகள் |
தொலைக்காட்சிகளில் தொடர்கள் ஒளிபரப்பாக தொடங்கிய காலத்தில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர் கவிதா சவுத்ரி. தூர்தர்ஷனில் 1989ம் ஆண்டுகளில் இருந்து 1991ம் ஆண்டு வரை ஒளிபரப்பான 'உதான்' என்ற தொடரில் போலீஸ் அதிகாரி கல்யாணி சிங் கேரக்டரில் நடித்து புகழ் பெற்றவர். பல தொடர்களில் நடித்த அவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
வயது மூப்பின் காரணமாக கடந்த சில வருடங்களாக நடிப்பில் இருந்து ஒதுங்கி அமிர்தசரசில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு நேற்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அருகில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை நடந்து கொண்டிருக்கும்போதே அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி கவிதா சவுத்ரி இறந்தார். அவருக்கு வயது 67. கவிதா சவுத்ரியின் மரணத்துக்கு பிரபல நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.