நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நிதிஷ் திவாரி இயக்கத்தில் ஆமீர்கான், சாக்ஷி தன்வர், பாத்திமா சனா ஷேக் மற்றும் பலர் நடிப்பில் 2016 ல் வெளிவந்து, 2000 கோடி வசூலித்து சாதனை புரிந்த ஹிந்திப் படம் 'டங்கல்'. அப்படத்தில் ஆமீர்கானின் இரண்டாவது மகளின் இளவயது மகளாக நடித்த சுஹானி பட்நாகர் இன்று காலையில் பரிதாபாத்தில் தனது 19வது வயதில் மரணம் அடைந்தார். அவரது மரணத்திற்கான காரணம் என்னவென்பது இதுவரையில் தெரியவில்லை.
அப்படத்திற்குப் பிறகு சுஹானி நடிப்பிலிருந்து விலகி தனது படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். அவரது அகால மறைவு பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அப்படத்தைத் தயாரித்த ஆமீர்கான் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அவர்களது இரங்கலைத் தெரிவித்துள்ளது. “எங்கள் சுஹானி மறைவு கேட்டு நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம். அவரது தாயார் பூஜாஜி அவர்களுக்கும், குடும்பத்தினர் அனைவருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கல். திறமையான இளம் பெண், அற்புதமான அணி வீரர், சுஹானி இல்லாமல் 'டங்கல்' முழுமை அடைந்திருக்க முடியாது. சுஹானி எங்களது மனதில் நீங்கள் எப்போதும் நட்சத்திரமாகவே இருப்பீர்கள். நிம்மதியாக ஓய்வெடுங்கள்,” என குறிப்பிட்டுள்ளது.