நல்ல படத்தை மிஸ் செய்ததற்கு வருத்தப்படுகிறேன் - ரகுல் ப்ரீத் சிங் | ஓணம் வாழ்த்து எதிரொலி - கடும் விமர்சனத்தில் சிக்கிய விஜய்! | ராகவா லாரன்ஸின் 25வது படத்தை இயக்கும் தெலுங்கு பட இயக்குனர்! | அமரன் படத்தின் டப்பிங் பணிகளைத் முடித்த சிவகார்த்திகேயன்! | பூஜா ஹெக்டேவிற்கு தமிழில் வரிசைக்கட்டும் படங்கள்! | சிம்புவிற்கு பதிலாக சிவகார்த்திகேயன் தி கோட் படத்தில் நடந்த மாற்றம்! | லெஜண்ட் சரவணன் படத்தில் இணைந்த பிரபலங்கள்! | காதலரை கரம்பிடித்த மேகா ஆகாஷ்: சென்னையில் எளிய முறையில் நடந்த திருமணம் | மக்களின் ஆதரவு உற்சாகப்படுத்துது...!: சந்தோஷத்தில் சஞ்சனா | போதை மறுவாழ்வு மையத்தில் ஸ்ரீகுமார் அட்வைஸ்! |
தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகளுக்கு எதிராக பாண்டி பஜார் போலீஸ் நிலையத்தில் நடிகரும், ஒளிப்பதிவாளருமான இளவரசு முறைகேடு புகார் கொடுத்தார். இந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, கடந்த டிசம்பர் 12ம் தேதி இரவு இளவரசு விசாரணைக்கு ஆஜரானதாகவும், அவரிடம் வாக்குமூலம் பெற்று, டிசம்பர் 13ம் தேதி கோர்ட்டில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும் போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால், அன்றைய தினம் படப்பிடிப்பில் இருந்ததாகவும், விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றும் இளவரசு கூறினார். ஆனால் அவர் ஆஜரானதற்கான ஆதாரங்களை போலீசார் தாக்கல் செய்ததால், நீதிமன்றத்தில் பொய் தகவலை தெரிவித்த இளவரசு மன்னிப்பு கேட்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இளவரசு கோர்ட்டில் ஆஜரானார். அவர் சார்பில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இளவரசு கொடுத்த புகாரின் மீது கடந்த 7 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காத பாண்டி பஜார் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர்களாக இருந்தவர்கள் ஆஜராக உத்தரவிட்டது நீதிமன்றம்.