ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி(47) புற்றுநோய் பாதிப்பால் இன்று (25ம் தேதி) இலங்கையில் காலமானார்.
பிரபல இசையமைப்பாளரான இளையராஜாவின் மகள் பவதாரிணி. இவர் சினிமாவில் பின்னணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் வலம் வந்தார். கடந்த சில ஆண்டுகளாக கல்லீரல் புற்றுநோயால் அவதியுற்று வந்தார். மேல்சிகிச்சைக்காக இலங்கைக்கு சென்றிருந்தார். அங்கு உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று(ஜன., 25) மாலை 5:30 மணியளவில் காலமானார். அவரது உடல் நாளை(ஜன., 26) மாலை சென்னைக்கு கொண்டு வரப்படகூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபுதேவா, ரோஜா நடித்த ‛ராசய்யா' திரைப்படத்தில் தனது தந்தை இளையராஜாவின் இசையில் ‛மஸ்தானா மஸ்தானா...' என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து 2001ல் பாரதி திரைப்படத்தில் இவர் பாடிய ‛மயில் போல பொண்ணு ஒன்னு...' என்ற பாடலை பாடிய பவதாரிணிக்கு தேசிய விருது கிடைத்தது. வேறு எந்தவொரு பாடகி குரலின் சாயலும் இல்லாமல், தனித்துவம் மிக்க குரல் இனிமையில் பல வெற்றி பாடல்களை பாடியிருக்கிறார் பவதாரிணி.
2002ல் நடிகை ரேவதி இயக்கிய மித்ர் - மை பிரண்ட் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழில் அமிர்தம், இலக்கணம், வெள்ளச்சி, மாயநதி உள்ளிட்ட 10 படங்களுக்கு இசையும் அமைத்துள்ளார். பவதாரிணிக்கு சபரிராஜ் என்பவருடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு குழந்தை இல்லை. பவதாரிணியின் உடன் பிறந்த சகோதரர்களான கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் தந்தை இளையராஜா போன்று சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகின்றனர்.
பவதாரிணியின் திடீர் மறைவு இளையராஜா குடும்பத்தினர், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலரும் பவதாரிணி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். அதோடு இளையராஜா குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
பவதாரிணியின் குரலில் வெளிவந்த சில பாடல்கள்...
01. மஸ்தானா மஸ்தானா... ராசய்யா
02. மயில் போல பொண்ணு ஒன்னு... பாரதி
03. ஒளியிலே தெரிவது தேவதையா... - அழகி
04. இது சங்கீத திருநாளா... - காதலுக்கு மரியாதை
05. தென்றல் வரும்... - ப்ரண்ட்ஸ்
06. வானம் அதிரவே... - ரமணா
07. ஒரு சின்ன மணிக்குயிலு... - கட்டப்பஞ்சாயத்து
08. காற்றில் வரும் கீதமே... - ஒரு நாள் ஒரு கனவு
09. தவிக்கிறேன்... தவிக்கிறேன்... - டைம்
10. நான் கண்களாலே பார்த்தேன் உன்னை.... - புதிய கீதை
11. தாலியே தேவயில்ல... - தாமிரபரணி
12. நீ இல்லை என்றால் வானவில்லே... - தீனா
13. ஆத்தாடி ஆத்தாடி... - அனேகன்