'கேங்கர்ஸ்' படத்துக்கு வரும் புது சிக்கல் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : மூன்று வேடங்களில் நடித்த ஹோன்னப்ப பாகவதர் | அஜித்தின் அடுத்த படம்: சஸ்பென்ஸாக இருக்கும் நிறுவனம் | அஜித்தின் 'டாப் வசூல்' படமாக மாறுமா 'குட் பேட் அக்லி' | நடிகர் நானிக்கு ஓடிடி-யில் அடித்த ஜாக்பாட் | குபேரா : தெலுங்குக்கே முன்னுரிமை? | மகனுக்காக திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தி அன்னதானம் செய்த பவன் கல்யாண் மனைவி | 6 மாதத்தில் 15 கிலோ எடை குறைத்த ரஜிஷா விஜயன் | குஞ்சாக்கோ போபன் - பாவனா எதிர்பாராத சந்திப்பு |
ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த் மற்றும் பலர் நடிக்கும் படம் 'இந்தியன் 2'. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. பொங்கலை முன்னிட்டு முன்னணி ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் அவர்கள் வாங்கியுள்ள படங்களைப் பற்றிய அப்டேட்டுகளைக் கொடுத்து வருகிறது.
கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2', அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி', விக்ரம் நடிக்கும் 'தங்கலான்', சிவகார்த்திகேயன் நடிக்கும் 21வது படம், விஜய் சேதுபதி நடிக்கும் 'மகாராஜா', ஆர்ஜே பாலாஜி நடிக்கும் 'சொர்க்கவாசல்', கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'ரிவால்வர் ரீட்டா' மற்றும் 'கன்னி வெடி', ஆகிய படங்களின் ஓடிடி உரிமைகளை வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்கள். இப்படங்கள் அனைத்தும் தற்போது தயாரிப்பில் இருக்கிறது. தியேட்டர்களில் வெளியான பின்பு இவை நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும்.
மேலே குறிப்பிட்ட படங்களின், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளின் ஓடிடி உரிமைகள் வாங்கப்பட்டுள்ளது. ஒரு சில படங்களின் ஹிந்தி உரிமைகளையும் சேர்த்து வாங்கியுள்ளனர்.
'இந்தியன் 2' படத்தின் உரிமை 200 கோடிக்கும், 'விடாமுயற்சி' படத்தின் உரிமை 125 கோடிக்கும் வாங்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.