சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‛தங்கலான்'. பா.ரஞ்சித் இயக்கி உள்ளார். கோலார் தங்க வயல் பின்னணியில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியலை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது. கடந்த பல மாதங்களாக படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
முன்னதாக இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்தனர். பின்னர் ஜன., 26, குடியரசு தினத்திற்கு தள்ளி வைத்தனர். இருப்பினும் பட பணிகள் முடியாததால் ரிலீஸ் தள்ளிப்போகலாம் என ஏற்கனவே தகவல்கள் வந்த நிலையில் தற்போது பொங்கலை முன்னிட்டு அதை உறுதிப்படுத்தி உள்ளனர். அதன்படி தங்கலான் படம் உலகம் முழுக்க வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவித்துள்ளனர். ஆனால் ரிலீஸ் தேதியை குறிப்பிடவில்லை. அனேகமாக தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.