மந்தாகினியாக பிரியங்கா சோப்ரா : முதல் பார்வை போஸ்டர் வெளியீடு | ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி |

ரோஜாவனம், ராமகிருஷ்ணா உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்தவர், ஜெய் ஆகாஷ். ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஆயுதப்போராட்டம், ஜெய் விஜயம், காதலன் காதலி, காதலுக்கு கண்ணில்லை, உள்பட சில படங்களை இயக்கி நடித்துள்ளார். தற்போது தயாரித்து இயக்கி நடித்துள்ள படம், 'மாமரம்'. கிகி வாலஸ், 'காதல்' சுகுமார், பிரம்மானந்தம், ராகுல் தேவ் நடித்துள்ளனர். பால் பாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளர், பாடல்களுக்கு நந்தா இசை அமைத்துள்ளார். சதீஷ் குமார் பின்னணி இசை அமைத்துள்ளார்.
படம் குறித்து ஜெய் ஆகாஷ் கூறும்போது “இது எனது சொந்த காதல் கதை. நான் லண்டனில் வசித்தபோது ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்தேன். அவரும் என் மீது உயிராக இருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் என்னைவிட வசதியும், புகழும் அதிகம் கொண்ட ஒருவர் கிடைத்ததும் எனது காதலை உதறிவிட்டு சென்று விட்டார். அந்த கதையைத்தான் படமாக எடுத்துள்ளேன்.
அடிப்படையில் அவர் நல்லவர். அதனால் படத்திலும் அவரை நல்லவராக காட்டி இருக்கிறேன். அவரை காதலித்தபோது இருவரும் சேர்ந்து ஒரு மாமர செடியை நட்டு வைத்தோம், அந்த செடி இப்போது மரமாகி இருக்கிறது. அந்த செடியை வைத்ததில் இருந்து படத்தை தொடங்கி இப்போது வரை எனக்கு ஏற்பட்ட நினைவுகளை அவ்வப்போது படமாக்கி இப்போது முடித்திருக்கிறேன்” என்றார்.