இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
வேகமாக வளர்ந்து வரும் நடிகர் அசோக் செல்வனும், சினிமாவில் ஜெயிக்க தொடர்ந்து போராடும் கீர்த்தி பாண்டியனும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்கள். கடந்த மாதம் அசோக் செல்வன் நடித்த 'கதாநாயகன்' படமும் கீர்த்தி பாண்டியன் நடித்த 'கண்ணகி' படமும் தனித்தனியாக வெளியானது. இந்த மாதம் வருகிற 25ம் தேதி இருவரும் இணைந்து நடித்துள்ள 'புளூ ஸ்டார்' படம் வெளிவருகிறது.
இந்த படத்தில் சாந்தனு, பிரித்வி, திவ்யா துரைசாமி நடித்துள்ளனர். இயக்குனர் பா.ரஞ்சித் உதவியாளர் ஜெய்குமார் இயக்க, கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
“இளைஞர்களின் வாழ்க்கையில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் கிரிக்கெட் விளையாட்டைச் சுற்றி நடக்கும் நட்பு, காதல், மோதல், ஆகிய விஷயங்களை ஜனரஞ்சக முறையில் சொல்லும் படமாக உருவாகியுள்ளது” என்கிறார், தயாரிப்பாளர் பா.ரஞ்சித்.