4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' |

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா, நிமிஷா சஜயன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் நவம்பர் 10ம் தேதி வெளியான படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இப்படத்தின் 50வது நாளை ரசிகர்களுடன் கொண்டாட படக்குழு முடிவு செய்துள்ளது. ஜனவரி 5ம் தேதி சென்னையில் உள்ள திரையரங்கில் அந்த கொண்டாட்டத்தை 99 ரூபாய் டிக்கெட் கட்டணத்துடன் ரசிகர்களை வரவழைத்து கொண்டாட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். அதில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கலந்து கொள்ளப் போகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
பொதுவாக இப்படியான பட விழாக்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, அல்லது நட்சத்திர ஹோட்டலில் விழா என்றுதான் நடக்கும். ஒரு படம் ஓடி முடிந்த பின் அதன் 50வது நாள் விழாவை இப்படி டிக்கெட் கட்டணம் வசூலித்துக் கொண்டாடுவது இதுவே முதல் முறையாக இருக்கும்.