கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் |

கேப்டன் மில்லர் பட விழாவில் தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதி, வாலிபர் ஒருவரை காலில் விழ வைத்து அடித்து துவைத்த வீடியோ பயங்கரமாக வைரலானது. அதுகுறித்து தற்போது அவரே தனது இன்ஸ்டாகிராமில் விளக்கமளித்துள்ளார். அதில், 'அந்த கூட்டத்தில் என்னிடம் ஒருவன் தவறாக நடந்து கொண்டான். உடனடியாக அவனை பிடித்து அடிக்க ஆரம்பித்தேன். அவனை ஓடவிடாமல் பிடித்துக் கொண்டேன். ஒரு பெண்ணின் அங்கத்தை பிடிக்க எப்படி அவனுக்கு அவ்வளவு தைரியம் வந்தது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் கத்தி அவனை தாக்கினேன். என்னை சுற்றி பல நல்ல மனிதர்கள் இருந்தார்கள். இந்த உலகில் நம்மை சுற்றி பல அன்பான மரியாதையான மனிதர்கள் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். ஆனால் நம்ம சுற்றி இருக்கும் இதுபோன்ற சில மிருகங்களால் தான் எனக்கு அச்ச உணர்வு உண்டாகிறது' என்று பதிவிட்டுள்ளார்.