நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் திரையுலகில் தனது வசீகரமான வசனத்தால் மக்களை சிந்திக்க வைத்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில், அனைத்து திரையுலக சங்கங்களும் இணைந்து வரும் ஜன.,6ல் (நாளை மறுநாள்) சென்னையில் கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் கோலாகலமாக கொண்டாடுகிறது.
இந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி, சாமிநாதன், நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள், தெலுங்கில் இருந்து சிரஞ்சீவி, வெங்கடேஷ், மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், கன்னடத்தில் சிவராஜ்குமார் மற்றும் ஹிந்தியில் முன்னணி நட்சத்திரங்கள் என பலரும் கலந்து கொள்கின்றனர்.
சுமார் ஆறு மணிநேரம் நடைபெற இருக்கும் இந்த விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், கருணாநிதியின் வசனம், பாடல்களில் இருந்து பல புதுமையான காட்சி அமைப்புகள், கருணாநிதியின் ஆவண படங்கள் என பல நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.