ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
மறைந்த நடிகர் விஜயகாந்த்திற்கு நடிகர் கமல்ஹாசன் நேரில் சென்று இறுதி மரியாதை செய்தார். உடல்நலக்குறைவால் நடிகர் விஜயகாந்த் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர். தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் : எளிமை, அன்பு, உழைப்பு, நட்பு, பெருந்தன்மைக்கு ஒரே பெயர் விஜயகாந்த். அவர் சினிமாவில் நட்சத்திர அந்தஸ்திற்கு வருவதற்கு முன் எப்படி என்னிடம் பழகினாரோ அப்படி தான் நட்சத்திர அந்தஸ்திற்கு வந்தபிறகும் பழகினார். எந்தளவு பணிவு இருக்குமோ அதே அளவு நியாயமான கோபமும் இருக்கும். அவரது கோபத்திற்கு நானும் ரசிகன். தனது நியாயமான கோபத்தால் தான் பொது வாழ்க்கைக்கு வந்தார் என நான் நம்புகிறேன். நல்ல நண்பருக்கு மனபாரத்துடன் விடை கொடுத்துவிட்டு செல்கிறேன்'' என்றார்.