முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி | மூன்று மொழிகளிலும் வேகமாக வளரும் அனஸ்வரா ராஜன் | அதர்வாவின் இதயம் முரளி படத்தில் பஹத் பாசில் | நடிகை Vs இயக்குனர் : வரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட வீடியோ | இதுதான் வெற்றியா... : கேள்வி கேட்ட ரஜினி மகள் | புற்றுநோய் பாதிப்பு பற்றி மனம் திறந்த மம்தா மோகன்தாஸ் | 'தலைவர் தம்பி தலைமையில் முதல் பிரிடேட்டர்' வரை; இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பாடகர் ஆன புகழ் : பிளாஷ்பேக் சொல்லி பீலிங் | இனியா நடித்த கவர்ச்சி படம் | 'சர்வம் மாயா' பட இயக்குனரை நேரில் சந்தித்து பாராட்டிய ராதிகா |

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ள படம் 'அயலான்'. ரவிக்குமார் இயக்கி உள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவருகிறது.
இந்த நிலையில் படத்தில் வரும் 'அயலான்' என்கிற வேற்று கிரகவாசி கேரக்டருக்கு சித்தார்த் குரல் கொடுத்துள்ள தகவலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “அயலான் அதன் அறிவிப்பில் இருந்தே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப்படம் 2024 பொங்கல் பண்டிகைக்கு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட தயாராகி வரும் நிலையில், 'தி வாய்ஸ் ஆப் அயலான்' பற்றிய அறிவிப்பை யூகித்து சமூக ஊடக தளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து பல பெயர்களை சொல்லி வந்தனர். 'அயலான்' கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்திருக்கிறார் என்பதை உற்சாகத்துடன் அறிவிக்கிறோம்” என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.