ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ‛வேட்டையன்' என பெயரிட்டுள்ளதாக இன்று(டிச., 12) ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அறிவித்தனர். இப்போது இன்னொரு சர்ப்ரைஸ் அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ‛லால் சலாம்' படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். கிரிக்கெட்டை தழுவி உருவாகி உள்ள இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் மொய்தீன் பாய் என்ற வேடத்தில் ரஜினி நடித்துள்ளார்.
பொங்கலுக்கு படம் திரைக்கு வர உள்ள நிலையில் இன்று ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு மொய்தீன் பாய் ரஜினியின் முன்னோட்ட வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் ரஜினி எதிரிகளை அடித்து பறக்க விடுவது, தொழுகை செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. பின்னணியில் ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் ‛ஜலாலி ஜலாலி...' என்ற பாட்டும் ஒலிக்கிறது.
ஒரேநாளில் ரஜினியின் இரு படங்களின் அப்டேட் வெளியாகி உள்ளது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.
லால் சலாம் முன்னோட்ட வீடியோ லிங்க் : https://www.youtube.com/watch?v=vL15-DjhDsw