பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
நடிகை த்ரிஷாவை ஆபாசமாக பேசியது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. த்ரிஷாவுக்கு ஆதரவாக குஷ்பு, சிரஞ்சீவி உள்ளிட்ட பிரபலங்கள் குரல் கொடுத்தனர். இந்த விஷயத்தில் மன்னிப்பு கேட்டார் மன்சூர் அலிகான். இதை த்ரிஷாவும் ஏற்றுக் கொண்டார்.
இந்த பிரச்னை இதோடு முடியும் என்றும் பார்த்தால் தன் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ஆகியோர் மீது சென்னை, ஐகோர்ட்டில் மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார் மன்சூர் அலிகான். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
மன்சூர் அலிகான், தொடர்ச்சியாக சர்ச்சை செயல்களில் ஈடுபடுகிறார். எந்த தவறும் செய்யவில்லை என தற்போது கூறும் அவர், கைது நடவடிக்கைகளில் தப்பிக்கவா மன்னிப்பு கோரினார்? இந்த விஷயத்தில் த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். பொதுவெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அவருக்கு அறிவுறுத்துங்கள் என நீதிபதி கூறினார்.
இதையடுத்து இந்த வழக்கிற்கு பதில் அளிக்கும்படி த்ரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி ஆகியோருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 22ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.