நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
திரைப்பட சங்கங்கள் தங்களின் வளர்ச்சி நிதியை அதிகப்படுத்துவதற்காக கலை நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். இந்நிலையில் மூத்த நடன கலைஞர்களை கவுரவிக்க நடன இயக்குனர் சங்கம் விழா எடுக்கிறது.
'டான்ஸ் டான் குரு ஸ்டெப்ஸ் 2023 கோலிவுட் விருதுகள்' என்ற தலைப்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மூத்த நடன கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட இருக்கிறது. சென்னை காமராஜர் அரங்கில் வரும் 30ம் தேதி மாலை 3 மணியளவில் டான்ஸ் மாஸ்டரும், நடிகரும், இயக்குனருமான ஸ்ரீதர் தலைமையில் நடக்கிறது.
இதுகுறித்து ஸ்ரீதர் கூறியதாவது: தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்து நடனத்தை பயிற்றுவித்த நடனக்கலைஞர்கள் பற்றிய விவரங்கள் வரலாற்றில் இல்லை. 1950களில் தொடங்கி 2023 வரையிலும் பல புகழ்பெற்ற நடனக்கலைஞர்கள் பணியாற்றி இருக்கின்றனர். அந்த நடனக்கலைஞர்கள் பற்றி பதிவு செய்து, அவர்களின் சாதனைகளை நினைவுகூர்ந்து, இந்த விழாவில் கவுரவிக்கப்படுகின்றனர். இது தவிர பிரமாண்டமான கலை நிகழ்ச்சிகளும் குறிப்பாக நடன நிகழ்ச்சிகளும் நடத்தப்பட இருக்கிறது. என்றார்.