ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் | இரவு 12மணிக்கு மிஷ்கினுக்கு ஐ லவ் யூ சொன்ன இயக்குனர் | 2வது வாரத்தில் கூடுதல் தியேட்டர்களில் 'காந்தாரா சாப்டர் 1' | எனக்கான போராட்டத்தை அமைதியாக நடத்துகிறேன்: தீபிகா படுகோனே | விருஷபா ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வரும் சூர்யா, வெங்கி அட்லூரி படப்பிடிப்பு | டில்லி முதல்வரை சந்தித்த காந்தாரா சாப்டர் 1 படக்குழு | இங்கிலாந்து பிரதமருடன் அமர்ந்து படம் பார்த்த ராணி முகர்ஜி | 'மெண்டல் மனதில்' என் மனதுக்கு மிக நெருக்கமான படம் : ஜிவி பிரகாஷ் |
நடிகை சிம்ரன் 90களின் மத்தியில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நுழைந்தார். நுழைந்த வேகத்திலேயே ஒரே சமயத்தில் நான்கு படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி நடித்தார். அதை தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களிலும், கதையம்சம் கொண்ட படங்களிலும் தொடர்ந்து நடித்து பல வருடங்கள் நம்பர் ஒன் இடத்தில் இருந்தார். இதற்கு பின்னணியில் அவருக்கு உறுதுணையாக நின்று படங்களை தேர்வு செய்து கொடுப்பதில் அவரது மேலாளர் காமராஜன் என்பவர் பக்கபலமாக இருந்தார். இந்த நிலையில் நேற்று காமராஜன் உடல் நலக்குறைவால் காலமானார். இதுகுறித்து தனது வருத்தத்தையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தி காமராஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் நடிகை சிம்ரன்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நம்ப முடியாத அதிர்ச்சி தருகின்ற ஒரு செய்தி. என்னுடைய அன்பு நண்பர் எம்.காமராஜன் இப்போது இல்லை.. கடந்த 25 வருடங்களாக எனது வலது கையாக, எனக்கு ஆதரவுத் தூணாக எப்போதுமே சிரித்த முகத்துடன் ஒரு புத்திசாலித்தனமான நம்பகத்தன்மை கொண்ட மனிதராக வலம் வந்தவர். அவர் தன்னை தானாகவே உருவாக்கிக் கொண்ட ஒரு மனிதர். நீங்கள் இல்லாமல் சினிமாவில் எனக்கு எதுவுமே சாத்தியம் ஆகி இருக்காது. உங்களது வாழ்க்கை பல பேருக்கு பெரிய அளவில் மாற்றத்தை கொடுத்திருக்கிறது. உங்களுடைய குடும்பத்திற்கும் உங்களை நேசிப்பவர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்.. ஓம் சாந்தி..” என்று கூறியுள்ளார் சிம்ரன்.