ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நேஷனல் கிரஷ் என்கிற அடைமொழியுடன் குறுகிய காலத்திலேயே தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை புகழ் பெற்று விட்டார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் ராஷ்மிகா தற்போது பாலிவுட்டில் ரன்பீர் கபூர் ஜோடியாக அனிமல் என்கிற படத்தில் நடித்துள்ளார். டிச., 1ல் படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
இப்பட நிகழ்ச்சியில் ராஷ்மிகா பற்றி நடிகர் மகேஷ்பாபு குறிப்பிட்டு பேசும்போது, தன்னுடன் நடித்த ராஷ்மிகா தற்போது அனைத்து மொழிகளிலும் நடிக்கும் அளவிற்கு எவ்வளவு பெரிய நடிகையாக வளர்ந்து விட்டார் என்று சிலாகித்து கூறினார். மேலும் இனி ராஷ்மிகா நடிப்பதற்காக ஒரு புதிய மொழியை கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்றும் கூறி கலாட்டா செய்தார்.