கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

2023ம் ஆண்டின் கடைசி மாதம் இன்று ஆரம்பமாகிவிட்டது. இன்று வெளியான படங்களில் நயன்தாரா நடித்துள்ள 'அன்னபூரணி', ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள 'பார்க்கிங்', தர்ஷன் நடித்துள்ள 'நாடு' ஆகிய படங்கள் குறிப்பிடும்படியான படங்களாக அமைந்துள்ளன.
இந்தப் படங்களுக்கு விமர்சன ரீதியாக வரவேற்பு கிடைத்தாலும் வசூல் ரீதியாக சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. படம் வெளியான இன்றைய முதல் நாளில் கூட ஒரு தியேட்டர் கூட ஹவுஸ்புல் ஆகவில்லை. மழையின் காரணமாக மக்கள் தியேட்டர்கள் பக்கம் வருவதைத் தவிர்த்து வருகிறார்கள். பொதுவாக பகல் காட்சிகள் காலியாக இருந்தால் கூட இரவுக் காட்சிகளுக்கு ஓரளவிற்குக் கூட்டம் வரும். ஆனால், அப்படி கூட இந்தப் படங்களுக்கு அமையவில்லை.
நாளையும், நாளை மறுநாளும் விடுமுறை நாட்கள்தான். ஆனால், அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் கடும் மழை வரக் கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதனால், இன்று வெளியாகியுள்ள படங்களின் வசூல் மிகவும் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது.