சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? | ஆற்றில் குப்பையை கொட்டியதற்காக பிரபல பாடகருக்கு 25000 ரூபாய் அபராதம் |
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிக்கும் படம் காதலிக்க நேரமில்லை. ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்தின் போஸ்டர் நேற்று வெளியானது. அந்த போஸ்டரில் நித்யா மேனன் பெயருக்கு பிறகு ஜெயம் ரவியின் பெயர் இடம் பெற்றிருந்தது. இதை அடுத்து தவறுதலாக இது நடைபெற்று விட்டதோ? என்கிற கேள்விகளும் எழுந்தது. இப்படியான நிலையில் தற்போது படக் குழு வட்டாரத்தில் அது குறித்து ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
அது என்னவென்றால், இந்த காதலிக்க நேரமில்லை படத்தில் நித்யா மேனனுக்கும், ஜெயம் ரவிக்கு இணையான கதாபத்திரம். அதன் காரணமாகவே தனது பெயருக்கு முன்பு நித்யா மேனனின் பெயரை போடுமாறு ஜெயம் ரவியே கேட்டுக் கொண்டதாக கூறுகிறார்கள். ஜெயம் ரவியே எப்படி தாமாகவே முன்வந்து கூறியது கோலிவுட்டில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.