இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! | தனுசை ஆச்சரியப்பட வைத்த இயக்குனர் விக்னேஷ் ராஜா! | 96 பட இயக்குனரிடம் கதை கேட்ட நானி |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் 'லியோ'. இப்படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியானது. தெலுங்கில் இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் வெளியிட்டது. அதன் தயாரிப்பாளரான நாக வம்சி சமீபத்திய பேட்டி ஒன்றில் 'லியோ' பற்றி பேசியுள்ளார்.
அதில், தனக்கு 'லியோ' படம் பிடிக்கவில்லை என்றும் ஆனால் 'ஜெயிலர்' படம் நன்றாக இருந்ததென்றும் கூறியுள்ளார். படத்தை வெளியிட்டதில் தனக்கு லாபம் தான், ஆனால், படத்தின் 'கன்டென்ட்' தனக்கு உடன்பாடில்லை என்றும் படத்தை வினியோகம் செய்ததோடு தன் வேலை முடிந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் இப்படத்தை சுமார் 20 கோடிக்கு வாங்கி வெளியிட்டு 50 கோடி வரை வசூலித்திருந்தார் நாக வம்சி. அவருக்கு சுமார் 20 கோடி வரை லாபம் கிடைத்திருக்கும்.




