ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி | பிளாஷ்பேக்: பிரிந்த இசை அமைப்பாளர்கள் | பிளாஷ்பேக்: முதல் பிளாஷ்பேக் படம் | பேயுடன் பர்ஸ்ட் நைட் கொண்டாடிய ஹீரோ: 'மெஸன்ஜர்' படத்தில் புதுமை | தெலுங்கில் தோல்வி அடைந்த பைசன்: தமிழில் விருதுகளை அள்ளுமா? | கடந்த 10 ஆண்டில் சினிமா தயாரிப்பாளர்கள் நிலை: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கவலை | பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி |

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‛அயலான்' படம் பொங்கலுக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ராணுவம் தொடர்பான கதையில் இந்தபடம் உருவாகிறது. இதையடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்தில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார் சிவகார்த்திகேயன்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தனது புதிய படத்திற்காக கதை கேட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இப்போது குட் நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க ஆரம்பகட்ட பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.