இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
காளி வெங்கட், பூ ராமு, மாஸ்டர் தீபன் மற்றும் பலர் நடித்த 'கிடா' படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 11ம் தேதி வெளியானது. இப்படத்திற்கு விமர்சகர்களிடம் நல்ல பாராட்டு கிடைத்தது.
மதுரை பக்கம் உள்ள ஒரு கிராமத்தில் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் தீபாவளிக்கு புதுத் துணி போட ஆசைப்படுகிறார். அதை வாங்கிக் கொடுக்க அவனது தாத்தா எவ்வளவு சிரமப்படுகிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.
குறைவான தியேட்டர்களில், குறைவான காட்சிகளில் இப்படம் வெளியாகி உள்ளது. இம்மாதிரியான சிறிய படங்களுக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தாலும் தியேட்டர்கள் கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது.
இது குறித்து இப்படத்தின் இயக்குனர் ரா வெங்கட் பேஸ்புக்கில், “இன்று காலை என் நண்பர்கள் இருவர் கிடா படம் பார்க்க காசி டாக்கீஸ் போயிருக்கிறார்கள்.. கூடவே ஒரு எட்டு பேரும் கிடா பார்க்க வந்திருக்கிறார்கள். ஆனால் தியேட்டர் நிர்வாகம் பதினைந்து பேர் இருந்தால் தான் படம் போடுவோம் என்றிருக்கிறார்கள். நண்பர்கள் பரவாயில்லங்க பதினைஞ்சு டிக்கெட் தான நாங்களே இன்னும் அஞ்சு டிக்கெட் எடுக்கிறோம்னு சொல்லியும் படம் போடல.. ஷோ கேன்சல்... எங்கோ ரிவியூ படிச்சிட்டு படம் பார்க்க வர்றவங்ககிட்ட என்ன பதில் சொல்றதுன்னு எனக்கும் தெரியல.. நல்ல படம்னு தேடி வந்தோம்னு சொல்றாங்க.. ஆனா ஷோ கேன்சல்.. இப்படிலாம் நடக்கும்னு தெரிஞ்சு தான சின்னபடங்கள் வருதுன்னு நீங்க சொல்ல வர்றது தெரியுது.. ஆனா ஆதங்கத்த எங்க கொட்டுறது .. அதான் இத ஷேர் பண்ணுனேன்.. மதுரையில ஒரு ஷோ தான் குடுத்தாங்க அங்கயும் இப்ப ஷோ காட்டல. மக்களே உங்களின் அருகே எதோ ஒரு ஷோ கிடா ஓடுச்சுன்னா போய் பாருங்க.. கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்.. நன்றி,” என நேற்று பதிவிட்டுள்ளார்.
இன்று காலையில், “Kasi Talkies திரையரங்கில் காலை 9 மணிக்கு திரையிடப்பட்ட #கிடா திரைப்படத்தின் காட்சியானது, ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மதியம் 12.40 மணிக்கு மாற்றப்பட்டு உள்ளது. நண்பர்கள் இதனை பயன்படுத்தி, தொடர்ந்து ஆதரவு தருமாறு படக்குழு சார்பாக கேட்டு கொள்ளப்படுகிறது,” என பதிவு செய்துள்ளார்.
சிறிய படங்களின் இந்த நிலையை தயாரிப்பாளர்கள் மாற்றப் போகிறார்களா அல்லது ரசிகர்கள் மாற்றப் போகிறார்களா ?.