பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
தமிழகத்தில் புதிய படங்கள் வெளியாகும் போது அரசு அனுமதித்த நேரங்களில் மட்டுமே சிறப்புக் காட்சிகளைத் திரையிட வேண்டும். அதற்காக அரசுக்கு விண்ணப்பித்து அனுமதியைப் பெற வேண்டும். அப்படித்தான் கடந்த மாதம் வெளியான 'லியோ', கடந்த வாரம் வெளியான 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஜப்பான்' ஆகிய படங்கள் அனுமதி பெற்று சிறப்புக் காட்சிகளை நடத்தினார்கள்.
இந்நிலையில் தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் சங்கத்தின் தலைவராக இருக்கும் திருப்பூர் சுப்பிரமணியத்திற்குச் சொந்தமான திருப்பூர் சக்தி சினிமாஸ் திரையரங்கில் சல்மான் கான் நடித்த 'டைகர் 3' படத்திற்கு காலை 7 மணிக்கும், இரவு 11.50 மணிக்கும் கடந்த இரண்டு நாட்களில் சிறப்புக் காட்சிகள் நடத்தப்பட்டுள்ளன. அது குறித்த 'ஸ்கிரீன் ஷாட்'கள் சமூக வலைத்தளங்களில் பரவின.
இதையடுத்து உரிய அனுமதியின்றி 6 காட்சிகளைத் திரையிட்ட அத்தியேட்டருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.