மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் | டாக்குமெண்டரியாக தயாராகும் ரகுவரன் வாழ்க்கை | தமிழுக்கு வரும் 'கொண்டல்' பிரதிபா | 'அன்னை இல்லத்தில் உரிமை இல்லை' : பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு கோர்ட் உத்தரவு | டிரைலருக்கு 'குட்' வரவேற்பு; படத்திற்கும் அப்படியே கிடைக்குமா? | ஒருங்கிணைந்து செயல்படுவோம் : தயாரிப்பாளர் சங்கத்திற்கு, நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அழைப்பு | அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள், ஆனாலும்…. | புதிய தொழிலாளர் சங்கத்திற்கு ஆள் சேர்க்கும் தயாரிப்பாளர் சங்கம் | பிளாஷ்பேக் : நடிகையாக இருந்து டப்பிங் கலைஞராக மாறியவர் | பிளாஷ்பேக்: விஸ்வாமித்ரரை காப்பாற்றிய என்.எஸ்.கிருஷ்ணன் |
பாலிவுட்டில் கடந்த வருடம் வெளியான காஷ்மீர் பைல்ஸ் என்கிற படத்தின் மூலம் பரபரப்பான இயக்குனராக மாறியவர் விவேக் ரஞ்சன் அக்னி ஹோத்ரி. தொண்ணூறுகளின் காலகட்டத்தில் காஷ்மீரில் இந்து பண்டிட்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களையும், அதனால் பாதிக்கப்பட்ட பண்டிட்கள் காஷ்மீரைவிட்டு வெளியேறி, அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த உண்மைச் சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது.. அதனாலேயே பாலிவுட்டையும் தாண்டி மற்ற மொழிகளிலும் இந்தப்படம் வரவேற்பைப் பெற்றது. அரசியல் அரங்கிலும் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து சமீபத்தில் அவரது இரண்டாவது படமாக 'தி வேக்ஸின் வார்' என்கிற படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆனால் முதல் படம் ஏற்படுத்திய தாக்கத்தில் அதற்கு கிடைத்த வரவேற்பு 10 சதவீதத்தை கூட இந்த படம் பெறவில்லை. இந்த நிலையில் சூட்டோடு சூடாக தனது மூன்றாவது படத்தில் வேலைகளில் இறங்கி விட்டார் விவேக் அக்னிஹோத்ரி.
இந்த படத்திற்கு பர்வா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பிரபல கன்னட எழுத்தாளர் எஸ்.எல் பைரப்பா எழுதிய பர்வா என்கிற நாவலை தழுவியே இந்த படம் உருவாக இருக்கிறது. மகாபாரதத்தில் இடம் பெற்ற முக்கியமான கதாபாத்திரங்களின் தனிப்பட்ட குணாதிஷயங்களை மையப்படுத்தி இந்த படம் உருவாக இருக்கிறது. குறிப்பாக இந்த படம் மூன்று பாகங்களாக தயாராக உள்ளது.