இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

நந்தமுரி கல்யாண் ராம் நடித்து வரும் தெலுங்கு படம் 'டெவில்'. 'பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட்' என்ற டேக்லைனுடன் வருகிறது. இந்தப் படத்தை அபிஷேக் நாமா இயக்குகிறார். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் உளவு ஏஜெண்டாக கல்யாண் ராம் நடிக்கிறார்.
இந்த படத்தில் சக்திவாய்ந்த அரசியல்வாதி வேடத்தில் மணிமேகலா எனும் கதாப்பாத்திரத்தில் மாளவிகா நாயர் நடிக்கிறார். இவரது தோற்றம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அவர் இதில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் தோற்றத்தை பிரதிபலிக்கிறார். ஆனால் சுதந்திர போராட்ட காலத்தில் வாழ்ந்த மணிமேகலா என்ற இளம் சுதந்திர போராட்ட வீரராக தான் அவர் நடிக்கிறார். இந்த படத்தின் நாயகியாக, அதாவது கல்யாண் ராம் ஜோடியாக சம்யுக்தா நடிக்கிறார். அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சவுந்தராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசை அமைக்கிறார்.