சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
சல்மான் கான் நடிப்பில் 2012ம் ஆண்டு வெளியான 'ஏக் தா டைகர்' படத்தின் மூன்றாம் பாகமான 'டைகர் 3' வரும் தீபாவளி பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகிறது. கேத்ரீனா கைப், இம்ரான் ஹாஸ்மி, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் யாஷ் ராஜ் பிலிம்சின் தயாரிப்பு. பாலிவுட்டில் வெளியாகும் இந்திய உளவாளிகளின் பின்னணியில் இது உருவாகி உள்ளது. ஷாருக்கான் நடித்த 'பதான்' படத்தின் தொடர்ச்சிதான் இது என்று தயாரிப்பு தரப்பு ஏற்கனவே அறிவித்திருக்கிறது.
படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டது. அதன் மூலம் தெரிய வரும் கதை இதுதான். தன் மனைவி கேத்ரீனா கைப் மற்றும் மகனுடன் அமைதியான வாழ்க்கை வாழும் 'டைகர்' சல்மான் கானிடம் நாட்டைக் காக்கும் புதிய பொறுப்பு வழங்கப்படுகிறது. சல்மான் கானால் பாதிக்கப்பட்ட இம்ரான் ஹாஷ்மி தற்போது புதிய வில்லனாக உருவெடுத்து பழிவாங்குகிறார். அவரிடமிருந்து நாட்டையும், குடும்பத்தையும் காப்பதற்காக சல்மான் கான் போராடுவதுதான் கதை. நாடு முக்கியமா? குடும்பம் முக்கியமா? என்ற கேள்விக்கு பதிலாக சல்மான்கான் அதாவது டைகர் என்ன முடிவெடுக்கிறார் என்பதுதான் திரைக்கதை.
இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால் இந்த படத்தில் ரேவதி ராணுவ உயர் அதிகாரியாக நடித்துள்ளார். ஏற்கனவே பல ஹிந்தி படங்களில் ரேவதி நடித்திருக்கிறார், ஹிந்தி படத்தை இயக்கி இருக்கிறார் என்றாலும் பல நூறு கோடி ரூபாய் செலவில் தயாராகியுள்ள ஒரு கமர்ஷியல் படத்தில் அவர் இப்போதுதான் நடித்துள்ளார்.