பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் |

கீதா கோவிந்தம் படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா மீண்டும் பரசுராம் பெட்டலா இயக்கத்தில் தனது 13வது படத்தில் நடித்து வருகிறார். இதில் நடிகைகள் மிருணாள் தாகூர், திவ்யன்ஷா கவுசிக் ஆகியோர் நடிக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு அமெரிக்காவில் தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் தலைப்பைப் டீசர் வீடியோ உடன் வருகின்ற அக்டோபர் 18ம் தேதி மாலை 6:30 மணிக்கு அறிவிப்பதாக படக்குழுவினர்கள் புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்திற்கு பேமிலி ஸ்டார் என தலைப்பு வைத்துள்ளதாக தகவல்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.