அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ஒழுங்கானவர்களா? : நடிகர் விநாயகன் கிண்டல் | அவசர அவசரமாக முடிக்கப்பட்ட பாலியல் வழக்குகள் ; அரசுக்கு எதிராக பார்வதி காட்டம் | ஹரி ஹர வீர மல்லு படம் தள்ளிப்போகிறதா? | ரேவதி இயக்கத்தில் பிரியாமணியின் ‛குட் ஒயிப்' | பெண் இயக்குனரின் பேண்டசி படம் 'மரகதமலை' | 5 ஆண்டுகளாக உருவான 'சையாரா' பாடல்கள் | தக் லைப் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி | 7 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள திரைப்பட விருதுகளை வழங்குங்கள்: தமிழக அரசுக்கு கோரிக்கை | கர்நாடகாவில் 'தக்லைப்' வெளியிட வர்த்தக சபை அனுமதிக்கணும்: நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தல் | வெற்றி பயத்தில் ராஷ்மிகா, பூஜா ஹெக்டே |
இந்திய சினிமாவின் 'பிக் பி' என்று செல்லமாக அழைக்கப்படுகிறவர் அமிதாப் பச்சன். இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார். 1970களில் ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகமாகி, அதனபிறகு சூப்பர் ஸ்டாராகி, இப்போதும் வயதுக்கேற்ற வேடங்களில் நடித்து வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். இந்த வயதிலும உடல்நலத்திலும், நினைவாற்றலிலும் ஆச்சர்யப்படுத்தும் வகையில் இருக்கிறார்.
அவருக்கு நேற்று 81வது பிறந்த நாள். நாடு முழுவதும் ரசிகர்கள் இதை உற்சாகமாக கொண்டாடினர். நள்ளிரவு 12 மணிக்கு அவரது பங்களாவுக்கு வெளியே ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கூடிவிட்டனர். உடனே வெளியே வந்த அமிதாப் பச்சன், ரசிகர்களை சந்தித்தார். கையசைத்து அவர்களின் வாழ்த்தை ஏற்றுக் கொண்டார். அதேபோல நேற்று அதிகாலையும் அமிதாப் வீட்டு முன் ரசிகர்கள் திரண்டனர். அவர்களையும் சந்தித்து நன்றி சொன்னார்.
மும்பை, டில்லி, கோல்கட்டா, உ.பி, பீகார், ஒடிசா உள்பட பல்வேறு மாநிலங்களிலும் அமிதாப் பச்சன் பெயரில் ரசிகர்கள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்தனர். மும்பையில் பல்வேறு இடங்களில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அமிதாப் பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடினர்.