ஹிந்தி படத்திற்காக டில்லி சென்ற தனுஷ் | கமல் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | ஜீனி படத்தின் புதிய அப்டேட் | சூர்யா பட மூலம் மீண்டும் தமிழுக்கு வரும் மலையாள நடிகர் | 2-வது திருமணம் செய்யும் நாக சைதன்யாவுக்கு நாகார்ஜுனா அளிக்கும் விலை உயர்ந்த பரிசு | நான் சினிமாவில் இருப்பதற்கு என் மனைவி தான் காரணம் - சிவகார்த்திகேயன் | விடாமுயற்சிக்கும், கேம் சேஞ்சருக்கும் இடையே போட்டியா ?- எஸ்.ஜே.சூர்யா | ஸ்ரீலீலாவை 'ஓவர் டேக்' செய்த ரஷ்மிகா மந்தனா | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவின் தந்தையை விரட்டிய தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : நாடகத்தையும், சினிமாவையும் இணைத்த கோமல் சாமிநாதன் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புதிய படம் 'லியோ'. இதில் சஞ்சய்தத், அர்ஜூன், திரிஷா, கவுதம் மேனன், மிஷ்கின் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வருகிறது. 'லியோ' படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சியில் ஆடிய நடன கலைஞர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக லியோ படத்தில் பங்கேற்ற நடன கலைஞர்கள் ஏராளமானோர், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மாம்பலம் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகாரும் கொடுத்துள்ளனர். அந்த புகார் மனுவில் “சில மாதங்களுக்கு முன்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் 'லியோ' படத்தில் இடம்பெறும் 'நான் ரெடி தான் வரவா...' பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இதில் நடனமாட 7 நாட்களுக்கு 22 ஆயிரம் சம்பளமாக பேசப்பட்டது. ஆனால் தற்போது எங்களுக்கு சம்பளமாக தலா 7 ஆயிரம் மட்டுமே வழங்கியுள்ளனர். வேலை முடிந்ததும் உரிய சம்பளம் தராமல் ஏமாற்றுகிறார்கள்" என்று கூறியுள்ளனர்.
இது தொடர்பாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''லியோ படத்தின் பாடல் காட்சிக்கு 2 ஆயிரத்துக்கு மேற்றபட்ட நடன கலைஞர்கள் தேவைப்பட்டார்கள். ஆனால் நடன கலைஞர்கள் சங்கத்தில் ஆயிரம் பேர் மட்டுமே உறுப்பினர்கள். அதிலும் 400 கலைஞர்கள் வெவ்வேறு படங்களில் பணியாற்றினார்கள். இதனால் சங்க உறுப்பினர்கள் 600 பேர் தவிர மீதம் தேவைப்படுவோருக்கு உறுப்பினர் அல்லாத நடன கலைஞர்கள் பாடல் காட்சியில் பயன்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு ஒரு நாளைக்கு 1750 ரூபாய் வீதம் 6 நாட்களுக்கு 10,500 ரூபாய் சம்பளம் முடிவு செய்யப்பட்டது. அதன்படி சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டு விட்டது'' என்று தெரிவித்துள்ளார்.