நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி | 10 வருடங்களுக்கு பிறகு தாயின் மனக்குறையை தீர்த்து வைத்த மாளவிகா மோகனன் | அதிக சம்பளம் பெறும் அறிமுக நடிகராக லோகேஷ் கனகராஜ் |

தமிழில் முதன்முதலில் துவங்கப்பட்ட பிக்பாஸ் சீசன்-1 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆக தேர்வானவர் ஆரவ் நபீஸ். பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டதால் பிக்பாஸ் ஆரவ் என்று பலரால் அறியப்படும் இவர் ஒன்றிரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்தாலும் பெரிய அளவில் அவை வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் கடந்த வருடம் வெளியான கலகத்தலைவன் படத்தில் வில்லனாக நடித்து வரவேற்பு பெற்றார்.
அதற்கு முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவுடன் சேர்ந்து காதல் கிசுகிசுக்களில் சிக்கினாலும் அவற்றிலிருந்து மெல்ல விலகி கடந்த 2020ல் ரஹீ என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஆரவ். கடந்த 2021 நவம்பரில் இவர்களுக்கு ஏற்கனவே ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த நிலையில் தற்போது பெண் குழந்தைக்கும் தந்தையாகி இருக்கிறார் ஆரவ். இது குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளதுடன் இரண்டு குழந்தைகளுடன் தம்பதி சகிதமாக உள்ள தங்களது புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார் ஆரவ்.