சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
கடந்த வாரத்தில் சித்தார்த் நடித்த சித்தா, மம்முட்டி நடித்த கண்ணூர் ஸ்குவாட், விஜய் ஆண்டனி நடித்த ரத்தம் ஆகிய மூன்று படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வந்தன. இந்த படங்கள் குறித்து நடிகர் பார்த்திபன் சோசியல் மீடியாவில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில், நேற்று சித்தா மற்றும் கண்ணூர் ஸ்குவாட். முன்தினம் ரத்தம் ஆகிய மூன்று படங்களிலும் பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் கொடூர ரணங்கள். மம்முட்டி சார் ஹைஸ்பீடில் கிளாப் அள்ளுகிறார்.
ரத்தம் படத்தை கண்டு அதிர்ந்தேன். விஜய் ஆண்டனி தன் பெண் குழந்தையோடு நடப்பதை கூட பெரும் நடிப்பாக பார்க்க இயலாது கண்ணீரம் துடைத்தேன். குற்றவாளி பெண் என்பதால் மன்னிக்கலாம் என்ற மனிதாபிமானமும் கண்டேன்.
சித்தா கரைத்து விட்டது மனதை. இது ஒரு எமோஷனல் படம் . இயக்குனரை தான் பாராட்ட வேண்டும். அவரைவிட நடிகர் சித்தார்த்தை விட தயாரிக்க தயாராக தாயான சித்தார்த்தின் மனதை பாராட்ட வேண்டும். கருணையை கழட்டி வைத்துவிட்டு சட்டம் தன் சுத்தியலால் ஓங்கி அடித்து சிறு துண்டுகளாக நறுக்கி உப்பிட்டு ஊர் நடுவே ஊறுகாயிட்டால் மட்டுமே இக் குற்றங்கள் குறையலாம் அல்லது இப்படி தனி மனிதனை தண்டிப்பதை திரையில் கண்டு உறையலாம்.
இன்னமும் அரசும் போலீசும் சிக்கனலில் பிச்சை எடுக்கும் சிறுவர்களுக்கு பின்னுள்ள ரவுடிசத்தை முழுமையாக முடிக்கவில்லையே என்ற கவலை பாதி டிக்கட்டாய் இடப்புறமுள்ள இதயத்தின் நடுப்புறமுள்ள பாக்கெட்டில்- என்று அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார் பார்த்திபன்.