லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மல்டி ஸ்டார் படங்களைப் பார்க்கவே முடியாது. ஒவ்வொரு ஹீரோவுக்கும் வேறு ஒரு ஹீரோவுடன் சேர்ந்து படத்தைப் பகிர்ந்து கொள்வதை கவனமாகத் தவிர்த்து வந்தார்கள்.
பான் இந்தியா என்ற ஒன்று ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற ஆரம்பித்தவுடன் நம் தமிழ் ஹீரோக்களுக்கும் மற்ற மொழிகளிலும் சென்று பேர் வாங்கி பிரபலம் ஆக வேண்டும் என்ற ஆசை வந்தது. அதன் விளைவாகத்தான் கடந்த ஓரிரு வருடங்களில் ஒரே படத்தில் சில பல நடிகர்கள், மற்ற மொழி நடிகர்கள் நடிப்பதைப் பார்க்க முடிகிறது.
கமல்ஹாசன் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'விக்ரம்' படத்தில் விஜய் சேதுபதி, மலையாள நடிகரான பஹத் பாசில் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தார்கள். அந்தப் படம் பெரும் வசூலைக் குவித்தது. அதே பார்முலாவை ரஜினிகாந்த்தும் அவரது 'ஜெயிலர்' படத்தில் தொடர்ந்தார். மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார் என மற்ற மொழி நடிகர்கள் அப்படத்தில் நடித்தார்கள். முக்கிய கதாபாத்திரமாக இல்லாமல் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தாலும் அக்கதாபாத்திரங்கள் படத்திற்குக் கூடுதல் பலத்தைக் கொடுத்தது என்பதை மறுக்க முடியாது.
'விக்ரம்' படத்தில் கையாண்ட அதே பாணியை விஜய்யை வைத்து இயக்கியுள்ள 'லியோ' படத்திலும் தொடர்ந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன் என ஒரு பெரும் கூட்டத்தைச் சேர்த்துள்ளார்கள்.
'விக்ரம், ஜெயிலர், லியோ' வரிசையில் தற்போது ரஜினி 170 படமும் சேர்ந்துள்ளது. இதுவரையில் அப்படம் குறித்த நடிகர்கள், நடிகைகளின் அப்டேட்டுகளில் சில பல முக்கியமான மற்ற மொழி நடிகர்கள் சேர்ந்துள்ளார்கள். ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன், மலையாள நடிகர் பஹத் பாசில், தெலுங்கு நடிகர் ராணா டகுபதி இப்படத்தில் நடிக்கப் போகிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களா அல்லது சிறப்புத் தோற்றமா என்பது படம் வந்த பிறகே தெரியும். இப்படியான மல்டி ஸ்டார் படங்கள் தமிழிலும் தயாராவது வரவேற்கத் தக்க ஒரு விஷயம்.