‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'லியோ'. அக்டோபர் 19ம் தேதி இப்படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. அதே சமயம், தெலுங்கு, கன்னட மொழிகளில் வெளியாக உள்ள 'கோஸ்ட், டைகர் நாகேஸ்வர ராவ்' ஆகிய இரண்டு பான் இந்தியா படங்களின் போட்டியை சமாளிக்க வேண்டிய சூழல் 'லியோ' படத்திற்கு ஏற்பட்டுள்ளது.
கன்னடத்தில் முன்னணி நடிகரான சிவராஜ்குமார் நடிப்பில் 'கோஸ்ட்' என்ற ஆக்ஷன் படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ளது. இதனால், கர்நாடகாவில் 'லியோ' படத்திற்கான தியேட்டர்கள் குறைய வாய்ப்பிருக்கிறது. மேலும், தற்போது காவிரி விவகாரம் நடந்து வரும் நிலையில் கர்நாடகாவின் உள் பகுதிகளில் 'லியோ' படத்தை எந்த சிக்கலும் இல்லாமல் திரையிட முடியுமா என்பதும் கேள்வி.
தெலுங்கில் முன்னணி நடிகரான ரவி தேஜா நடிப்பில் 'டைகர் நாகேஸ்வரராவ்' என்ற ஆக்ஷன் படம் அக்டோபர் 20ம் தேதி வெளியாக இருக்கிறது. அதேப்போல் தெலுங்கில் மற்றொரு முன்னணி நடிகரான பாலகிருஷ்ணா நடித்துள்ள 'பகவந்த் கேசரி' படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படமும் வழக்கம் போல ஒரு ஆக்ஷன் படம்தான். இதன் காரணமாக தெலங்கானா, ஆந்திராவில் 'லியோ' படம் அதிக தியேட்டர்களில் வெளியாக சிக்கல் எழலாம். இரண்டு மொழிகளிலுமே நேரடிப் படங்களுக்குத்தான் அதிக தியேட்டர்களைக் கொடுக்க வேண்டும் என்று அந்தந்த மொழி தியேட்டர்காரர்கள் வலியுறுத்துவார்கள்.
இரண்டு படங்களும் பெரிய படங்கள், முக்கிய நடிகர்களின் படங்கள், இரண்டு டிரைலர்களுக்கும் நல்ல வரவேற்பு, எதிர்பார்ப்பு உள்ளதால் அப்படங்களின் போட்டியையும் 'லியோ' சமாளிக்க வேண்டியிருக்கும்.