ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறந்து விடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் தனது 'சித்தா' படத்தின் புரமோசனுக்காக பெங்களூரு சென்றிருந்த நடிகர் சித்தார்த்தை அங்குள்ள கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் விரட்டினர். இதற்கு கன்னட நடிகர்கள் பிரகாஷ்ராஜும், சிவராஜ்குமாரும் மன்னிப்பு கேட்டனர். இந்த விஷயத்தில் இதுவரை மவுனமாக இருந்த சித்தார்த், தற்போது இதுதுகுறித்து கூறியிருப்பதாவது:
முதன்முறையாக ஒரு தயாரிப்பாளராக, என்னுடைய திரைப்படம் திரையரங்குகளில் வெளிவருவதற்கு முன்பாகவே பலருக்கும் அதை திரையிட்டுக் காட்டினேன். பெங்களூருவிலும் அப்படி ஒரு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தோம். ரிலீசுக்கு முன்பாக சுமார் 2,000 மாணவர்களுக்கு திரையிட திட்டமிட்டோம். அன்றிரவு கன்னட நட்சத்திரங்களுக்கும் படத்தை திரையிடும் திட்டமும் இருந்தது. ஆனால், காவிரி போராட்டத்துக்கு மதிப்பளித்து நாங்கள் அனைத்தையும் ரத்து செய்தோம். இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அதையும் தாண்டி ஒரு நல்ல படத்தைப் பற்றி அங்கிருந்தவர்களுடன் பேச முடியாதது வருத்தம் அளிக்கிறது.
அங்கு என்ன நடந்தது என்பதை அனைவரும் பார்த்தீர்கள். அதுவும் பல கேமராக்களுக்கு முன்னால் நடந்தது. நான் அது பற்றி பேச விரும்பவில்லை. படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், கவனத்தை சிதறடிக்கும் வகையில் எதையும் பேச விரும்பவில்லை. என் படத்துக்கும் காவிரி பிரச்னைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனது பணத்தை செலவழித்து நான் தயாரிக்கும் படங்களில் எனது சமூகப் பொறுப்பு வெளிப்படும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.