காதலி ஷீத்தலை பிரிந்த பப்லு! | துபாய் வீட்டில் கிருஷ்ண கீர்த்தனை நடத்திய ஏ.ஆர்.ரகுமான்! வைரலாகும் வீடியோ!! | 46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை மணந்தார்! | அடுத்த ஆண்டு ஏப்ரலில் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பு தொடக்கம்! | கவின், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் புதிய கூட்டணி! | சலார் படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ்? | “மதிமாறன்” பர்ஸ்ட் லுக் வெளியீடு | டிவி நடிகர் சித்து நாயகனாக அறிமுகமாகும் 'அகோரி' | மீண்டும் சர்ச்சை: 'வாடிவாசல்' சூர்யா நடிப்பாரா அல்லது விலகுவாரா? | டிசம்பர் 15ல் 8 புதிய படங்கள் ரிலீஸ் |
தமிழ் சினிமாவில் பேய் படங்களுக்கான பெரும் வரவேற்பை மீண்டும் ஆரம்பித்து வைத்த படம் 'முனி'. ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 2007ம் ஆண்டு வெளிவந்த படம் 'முனி'. அப்படத்தில் ராகவா லாரன்ஸ், ராஜ் கிரண், வேதிகா, கோவை சரளா, வினு சக்கரவர்த்தி மற்றும் பலர் நடித்திருந்தார்கள். அப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்றது.
அதனால், அப்படத்தின் இரண்டாம் பாகத்தை 'முனி 2- காஞ்சனா' என்ற பெயரில் ராகவா லாரன்ஸ் தயாரித்து, இயக்கி, கதாநாயகனாக நடித்து 2011ம் ஆண்டு வெளியிட்டார். அப்படமும் சிறப்பான வெற்றியைப் பெற்றது. அப்படம் 'முனி 2' என்று சொல்லப்பட்டாலும் 'காஞ்சனா' என்ற பெயர் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது.
அதற்கடுத்து 'முனி 3 - காஞ்சனா 2' படத்தை ராகவா லாரன்ஸ், தயாரித்து, இயக்கி நடித்து 2015ம் ஆண்டு வெளியிட்டார். முதலிரண்டு பாகங்களை விடவும் இந்த மூன்றாம் பாகம் குறைவான வரவேற்பைத்தான் பெற்றது.
பின்னர் 'முனி 4 - காஞ்சனா 3' படத்தை 2019ம் ஆண்டு இணை தயாரிப்பு செய்து, இயக்கி, நடித்து வெளியிட்டார் ராகவா லாரன்ஸ். படத்திற்கான விமர்சனம் சரியாக அமையவில்லை என்றாலும் வசூல் ரீதியாக இப்படம் தப்பித்தாகச் சொன்னார்கள்.
'முனி' வரிசையில் 4 பாகங்கள் வெளியானது போல இப்போது மற்றொரு பேய்ப் பட வரிசையில் 'அரண்மனை 4' 2024 பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார்கள். சுந்தர் சி இயக்கத்தில் 'அரண்மனை' முதல் பாகம் 2014ம் ஆண்டிலும், 'அரண்மனை 2' 2016ம் ஆண்டிலும், 'அரண்மனை 3' 2021ம் ஆண்டிலும் வெளிவந்தது. அவற்றில் முதல் மற்றும் இரண்டாம் பாகப் படங்கள்தான் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
'அரண்மனை 4' படத்தையும் சுந்தர் சி இயக்கி நடிக்க, தமன்னா, ராஷி கண்ணா, யோகிபாபு, கோவை சரளா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஹிப் ஹாப் தமிழா இப்படத்திற்கு இசையமைக்கிறார். தமிழ் சினிமாவில் இதுவரையில் 'முனி' படத்தின் தொடர்ச்சியாக 4 பாகங்கள் வந்திருந்தது. தற்போது 4 பாகங்களுடன் வெளியாக உள்ள மற்றொரு தொடர்ச்சியாக 'அரண்மனை' இடம் பெற உள்ளது.
அது போல 'சிங்கம்' படத்திற்கு மட்டுமே 3 பாகங்கள் வெளியாகி உள்ளது. அதன் 4ம் பாகமும் வருமா என சூர்யா ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.