சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

பி .வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், லட்சுமி மேனன், வடிவேலு உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 படம் நேற்று திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தில் லாரன்ஸ் வேட்டையன் வேடத்திலும், சந்திரமுகியாக கங்கனா ரணாவத்தும் நடித்துள்ளார்கள். இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்ற லாரன்ஸ், நேற்று பழனியில் உள்ள தண்டாயுதபாணி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார். அதன்பிறகு மலைக்கோயில் அடிவாரத்தில் உள்ள புலிப்பாணி சித்தர் ஜீவசமாதிக்கு சென்று தியானம் செய்தார் லாரன்ஸ். மலை அடிவாரப் பகுதிக்கு வந்தபோது ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதை அடுத்து, அவர்களின் செல்பிக்கு போஸ் கொடுத்து விட்டு அங்கிருந்து திரும்பி இருக்கிறார் .