நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படம் அக்டோபர் 19ம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இம்மாதம் 30ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுவதாக இருந்தது. அது குறித்த டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் திடீரென்று லியோ படத்தை தயாரித்து வரும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார், லியோ படத்தின் இசை விழா ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இதற்கு சமீபத்தில் ஏ. ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்டது போன்ற குளறுபடி ஏற்பட்டு விடக்கூடாது மற்றும் அரசியல் அழுத்தம் போன்ற காரணங்கள் இருக்கலாம் என தகவல்கள் வெளியாகின.
இந்த நேரத்தில் லியோ படத்தின் ஆடியோ விழா ரத்தானதால் விஜய்யின் ரசிகர்கள் மிகப்பெரிய கொந்தளிப்புக்கு ஆளாகி உள்ளார்கள். இதற்கு தயாரிப்பு நிறுவனம் விளக்கம் கொடுத்தபோதும் அவர்கள் அதை ஏற்றுக் கொள்வதாக இல்லை. லியோ ஆடியோ விழா ரத்தானதின் பின்னணியில் அரசியல் இருப்பதாகவே கருதுகிறார்கள். அதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்ட விஜய் மக்கள் மன்றத்தை சேர்ந்த ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளார்கள். அதில், ‛ஆடியோ லான்ச் இல்லைன்னா என்ன, ஆட்சிய புடிச்சிட்டா போச்சி' என்ற வாசகங்களுடன் போஸ்டரை வெளியிட்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள்.