ஹேப்பி என்டிங் ஆர். ஜே. பாலாஜியின் புதிய படம்! | அடுத்தாண்டு ஜன., 26ல் வெளியாகும் இளையராஜாவின் சிம்பொனி இசை | ‛கேம் சேஞ்சர்' டீசர் தேதியை அறிவித்த படக்குழு | ஓடிடிக்கு வரும் ரஜினியின் வேட்டையன் | ‛பாட்டல் ராதா' படம் டிசம்பர் 20ல் ரிலீஸ் | 48வது படம் : சிம்பு எடுத்த முடிவு | ஜெய் ஹனுமான் ஆக ரிஷப் ஷெட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு | குரங்குகளுக்கு உணவளிக்க ரூ.1 கோடி நிதி வழங்கிய அக்ஷய் குமார் | ஒரு காதல் வந்திருக்கு : மத்தாப்பாய் பூரிக்கும் துஷாரா | புது பாடகர்கள், கவிஞர்களை தேடுகிறேன் : 'பற பற பற பறவை' ரகுநந்தன் |
வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான வசந்த் ரவி வித்தியாசமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். இவரின் அறிமுக படமான தரமணி பலரின் பாராட்டை பெற்றது. அப்படத்தை தொடர்ந்து வெளியான ராக்கி மற்றும் அஸ்வின்ஸ் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் யார் இந்த வசந்த் ரவி என்ற கேள்வியையும் ரசிகர்கள் மனதில் எழ வைத்தது.
இப்படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் அர்ஜூன் முத்துவேல் பாண்டியன் என்ற கதாப்பாத்திரத்தில் ரஜினியின் மகனாக நடித்திருந்தார். எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவரின் அந்த நடிப்பு இன்று அனைவராலும் பேசப்படுகிறது. என்ன வேடம் கொடுத்தாலும் அதை எந்த அளவுக்கு சிறப்பாக செய்ய முடியுமோ அந்த அளவுக்கு சிறப்பாகவும் மேலும் இது போன்ற வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடிக்க விரும்புவதாக அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். வெப்பன் எனும் படத்தில் சத்யராஜுடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அதிக அளவு துப்பாக்கிகளை கையாளும் சண்டைக் காட்சிகளில் இவர் நடித்துள்ளாராம். இதற்குப் பிறகு ஒரு மிகப்பெரிய இயக்குனருடன் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகி உள்ளாராம் வசந்த ரவி.