2025 பொங்கல் போட்டியில் அப்பா, மகன்? | தனது முந்தைய வசூலை முறியடிப்பாரா 'வேட்டையன் ' ரஜினிகாந்த் | 'வேட்டையன்' படமே கடைசி : வீடுகளாக மாறப் போகும் உதயம் தியேட்டர் | 'தேவரா' வசூல், வரவேற்பு : வருத்தத்தில் என்டிஆர் | குறைந்து போன ஓடிடி, சாட்டிலைட் உரிமை விற்பனை | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் மிஷ்கின் | இயக்குனர் ஆனார் பிரபல படத்தொகுப்பாளர் | பிளாஷ்பேக் : ‛டேய் இது இங்கிலீஷ் குரூப்புடா...' - பொன்மனச் செல்வன் படப்பிடிப்பில் விஜயகாந்த் கலாட்டா | தன் பெயரில் பண மோசடி விளம்பரம் : பாடகி சித்ரா எச்சரிக்கை | தாதாவுடன் பார்ட்டியில் கலந்து கொண்டேனா? - பிரயாகா மார்டின் விளக்கம் |
சமீபத்தில் ரஜினியுடன் இலங்கை நட்சத்திர கிரிக்கெட் வீரர் மலிங்கா இணைந்து எடுத்துக்கொண்டது போன்ற புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. ஆனால் பலரும் நினைப்பது போல அவர் கிரிக்கெட் வீரர் மலிங்கா அல்ல. தமிழ் சினிமாவில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வரும் சத்யா தான் அவர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த இயக்கி வரும் 'லால் சலாம்' படத்திற்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ள சத்யா, மேலும் அந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். படத்தில் தான் நடித்த கதாபாத்திர தோற்றத்திலேயே ரஜினியுடன் சத்யா எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் இன்று அவரை கிரிக்கெட் வீரர் மலிங்காவாக பலரையும் நினைக்க வைத்துள்ளது.
'மூன்று பேர் மூன்று காதல்' படத்தின் மூலமாக ஆடை வடிவமைப்பாளராக தனது பயணத்தை துவங்கிய சத்யா கிட்டத்தட்ட 46 படங்கள் வரை பணியாற்றி உள்ளார். ராஜா ராணி, இரும்புத்திரை, தெறி, பைரவா, ரஜினி முருகன், மான் கராத்தே உள்ளிட்ட படங்களில் பணியாற்றி உள்ளதுடன் சமீபத்தில் வெளியான 'மார்க் ஆண்டனி' படத்திலும் பணியாற்றி உள்ளார்.
ரஜினியுடன் எடுத்துக் கொண்ட படம் வைரலானதை தொடர்ந்து இதுகுறித்து சத்யா கூறும்போது “லால் சலாம் படத்தில் ரஜினிக்கு நான்தான் ஆடை வடிவமைப்பு செய்தேன். கிட்டத்தட்ட 170 படங்கள் வரை நடித்துவிட்ட அவர் இத்தனை படங்களில் அணியாத ஆடை வகைகளே கிடையாது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு படத்திற்கு படம் புதிது புதிதாக பலவிதமான ஆடைகளை அவர் அணிந்து நடித்துள்ளார். அதனால் இந்த படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரியும் அதேசமயம் இதுவரை அவர் அணிந்த உடைகளில் இருந்து கொஞ்சம் வித்தியாசமாகவும் மேலும் அவரது ரசிகர்களுக்கும் பிடிக்கும் விதமாகவும் ஆடைகளை வடிவமைத்துள்ளேன். இந்த மாதிரி ஒரு ரஜினியை பார்த்து ரொம்ப நாளாச்சு என்று ரசிகர்கள் ஆச்சரியமும் சந்தோஷமும் படும் வகையில் வின்டேஜ் ரஜினியை கண்முன் நிறுத்தும் விதமாக லால் சலாம் படத்தில் அவரது ஆடைகள் இருக்கும்.
ரஜினி சாருடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியாகி பலரும் என்னை இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்கா என்றே நினைத்துக் கொண்டார்கள். அது ஒருவகையில் எனக்கு பெருமைதான். அதனால் மலிங்கா போன்ற தோற்றத்திலேயே என்னை மறு உருவாக்கம் செய்து ஒரு லுக் டெஸ்ட்டும் எடுத்துக்கொண்டேன். ஏனென்றால் தற்போது நடிப்பிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன். ஒருவேளை நாளை யாராவது மலிங்காவின் பயோபிக் படம் எடுக்கிறார்கள் என்றால் அந்த ஆடிசனுக்கு முதல் ஆளாக சென்று நிற்பேன்” என்கிறார் சத்யா.