ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
கடந்த 2005ல் வெளியாகி ஹிட்டான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமாக சந்திரமுகி 2 படம் உருவாகியுள்ளது. பி வாசு இயக்க, ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, கங்கனா ரணவத், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி காங்கே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆஸ்கர் விருது புகழ் மரகதமணி எனும் கீரவாணி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 28ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியை ஐதராபாத்தில் நடத்திய சந்திரமுகி 2 படக்குழுவினர், அதைத் தொடர்ந்து ஐதராபாத் ஜூபிளி ஹில்ஸில் இருக்கும் பெத்தம்மா தல்லி கோயிலுக்கு சென்று வழிபட்டுள்ளனர்.
சமீபகாலமாக தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்கள் தங்களது படம் வெற்றிகரமாக ஓடவேண்டும் என்பதற்காக இந்த கோயிலுக்கு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கூட தான் நடித்த சாகுந்தலம் பட ரிலீஸிற்கு முன்னதாக நடிகை சமந்தா உள்ளிட்ட படக்குழுவினர் இங்கு சென்று வழிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.