''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
திரைப்படங்களில் சண்டை காட்சிகளை வடிவமைக்கும் சண்டை இயக்குனர்கள், மற்றும் சண்டை கலைஞர்களுக்கென்று தனியாக யூனியன் உள்ளது. இந்த சங்கத்தில் ஏற்கெனவே உறுப்பினராக இருப்பவர்களின் வாரிசுகள் எளிதில் உறுப்பினராகிவிட முடியும், புதியவர்கள் உறுப்பினராகவது கடினம். இந்த நிலையில் முதன் முறையாக ஸ்டண்ட் யூனியனில் உறுப்பினராக சேருவதற்கு நன்கு ஸ்டண்ட் கலை பயிற்சி தெரிந்த வெளி நபர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட இருக்கிறது.
அடுத்த மாதம் 21ம் தேதி இந்த தேர்வு நடக்கிறது. 18 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். குறைந்த பட்சம் 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும், கார், பைக் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். நீச்சல் பயிற்சி, ஜிம்னாஸ்டிக், சிலம்பம், வாள் பயிற்சி பெற்றிருந்தால் சிறப்பு தகுதியாக கருதப்படும். கலந்து கொள்கிறவர்கள் உள்ளூர் காவல் நிலையித்தில் எந்த குற்ற வழக்கும் இல்லை என்கிற சான்றிதழ் பெற்று வரவேண்டும். இந்த தேர்வு இனி 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த சங்க நிர்வாகிகள் இதனை தெரிவித்தனர்.