மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

ஷாரூக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்த ஜவான் படம் திரைக்கு வந்துள்ள நிலையில், அடுத்தபடியாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள இறைவன் படம் திரைக்கு வரப்போகிறது. இதன்பிறகு பிரபாஸ் நடிக்கும் கண்ணப்பா என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. பக்தி கதையில் உருவாகும் இந்த படத்தில் சிவன் வேடத்தில் பிரபாசும், பார்வதியாக நயன்தாராவும் நடிக்க இருக்கிறார்களாம். பான் இந்தியா கதையில் உருவாகும் இதில் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்கள்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள சலார் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், கமல்ஹாசன் , அமிதாப்பச்சனுடன் இணைந்து கல்கி 2898 ஏடி என்ற படத்தில் நடிக்கும் பிரபாஸ், அதையடுத்து இந்த கண்ணப்பா படத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.